Tuesday, January 26, 2010

சிங்களம் பெண் போராளிகளை கொல்லும் வீடியோ

சிங்களம் பெண் போராளிகளை கொல்லும் வீடியோ

ஈழத் தமிழர் மீதான இறுதிப் போரின் போது சிங்கள அரசு நடத்திய காட்டுமிராண்டித்தனம் குறித்த புதிய ஒளிப்பதிவு ஒன்று வெளியாகியுள்ளது என ஹெட்லைன்ஸ் ருடே என்னும் வட இந்தியத் தொலைக்காட்சித் தெரிவித்துள்ளது.

பெயர் குறிப்பிடாதவர்களால் இந்த ஒளி்ப்பதிவு தமக்கு கிடைத்ததாகவும் அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

அதில், தமிழீழ விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி சிங்கள இராணுவத்தினர் சித்திரவதை செய்வதை போன்ற காட்சிகள் உள்ளன என்றும் அத்தொலைக்காட்சி தெரிவிக்கிறது.

அத்தொலைக்காட்சி அவ்வொளிப்பதிவை காட்சிக்கு இதுவரை வைக்கவில்லை என்பதும், அந்த ஒளிப்பதிவை வெளியிடாமலேயே அந்த ஒளிப்பதிவு குறித்து சிங்கள இராணுவத்திடம் கேட்டது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

எப்பொழுதும் போல் சிங்கள இராணுவம் இதனை மறுத்துள்ளது. இலங்கையில் நாளை அதிபர் தேர்தல் நடப்பதால் அந்த ஒளிப்பதிவு இந்திய அரசால் நெருக்கடி கொடுத்து வெளியிடப்படாமல் தடுத்த வைக்கப்பட்டிருக்கலாம் என பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் குடித்து விட்டு கலாட்டா செய்து அடிபடும் வட இந்திய மாணவர்களுக்காக காட்டுக் கத்தாக கத்துகின்ற, வட இந்திய ஊடகங்கள் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்த ஆவணம் கிடைத்தும் கூட அதனை வெளியிடாமல் மௌனம் சாதிப்பதை என்னவென்று சொல்வது?

யாழ் மாவட்டத்தில் பதற்ற நிலைமைகள் இல்லை

யாழ் மாவட்டத்தில் தற்போது பதற்ற நிலைமைகள் இல்லை

யாழ் மாவட்டத்தில் தற்போது பதற்ற நிலைமைகள் இல்லை எனவும்; நேற்று திங்கட்கிழமை இரவும், இன்று அதிகாலையும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் தற்போது நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் எமக்கு செய்திகள் கிடைத்துள்ளன‌. ஆனால் மக்கள் ஒருவரையும் வெளியில் காணக்கூடியதாக தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இவ் தேர்தல் ஒரு பயஉணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என்பது நிஜம்

அதிபர் தேர்தல் நாள் துக்க தினமாக அனுசரிக்க

அதிபர் தேர்தல் நாள் - துக்க தினமாக அனுசரிக்க விடுதலைப் புலிகள் அழைப்பு

கொழும்பு: இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெரும் ஜனவரி 26ம் தேதியை துக்க தினமாக அனுசரிக்குமாறு இலங்கைத் தமிழர்களுக்கு விடுதலைப் புலிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விடுதலைப் புலிகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை...

பாசமிகு தமிழீழ மக்களே இலங்கையின் தேசிய இனங்களுக்கு உண்டான ஜனாதிபதி தேர்தல் என இலங்கை தேர்தல் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த தேர்தல்.

தேசிய இனங்களில் ஒன்று என குறிப்பிடப்பட்டிருக்கும் தமிழ் இனத்தை அடக்கி ஒடுக்கி இடுக்கத்தின் உச்சியில் வைத்து நடாத்தப்படுகின்றது.

சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கி வாழ்வாதாரங்களை அழித்து தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமித்து அவர்கள் இரத்தத்தில் சிங்கக் கொடி ஏற்றி விட்டு நடாத்தப்படுகிறது.

இதற்குத்தான் ஜனநாயகம் என சிங்கள பேரினவாதம் பெயர் வைத்துள்ளது.

ஒடுக்குமுறைக்கும் இடம் பெயர்தலுக்கும் இரத்தக்களறிக்கும் சிங்கள பேரினவாதம் வைத்தருக்கும் பெயர்தான் ஜனநாயகம்.

இன உரிமைக்காய் போராடியவர்களை கொடும் சிறைக்குள் அடைத்துவைத்தும் சமாதானம் பேசியவர்களை கொன்று ஒழித்தும் ஈவிரக்கமற்ற அநீதிகள் புரிந்த பதவியின் பெயர்தான் இலங்கையின் ஜனாதிபதி.

இதற்குத்தான் இப்போது தேர்தல்.

தேர்தல் சமயங்களில் தம்மை நல்லவர் போல் காட்டி சமாதானம் பேசி அப்பாவிகளான தமிழ்மக்களை நம்பவைத்து மீண்டும் ஏமாற்றி அவர்களை ஒடுக்குவதுதான் இலங்கை ஜனாதிபதி தேர்தல்.

சிங்கள பேரினவாதம் தன்னை வளர்த்துக் கொள்ளுவதற்காகாவும் தமிழர் ஒடுக்குமுறைக்காக சில மாற்றங்களைச் செய்துகொள்ளுவதும்தான் இந்த தேர்தல்களின் வெளிப்பாடுகளும் முடிவுகளுமாக இருக்கும்.

ஆனால் இதில் போட்டியிடும் பேரினவாதிகளுக்குள் தமிழ் இன ஒடுக்குமுறைக் கொள்கையில் எந்தக் கருத்து வேறுபாடும் இருக்காது.

இதுவரை காலமும் ஏற்படாத மனித பேரவலத்தை ஏற்படுத்தி தமிழர் இரத்தத்தில் கொடியேற்றிய இந்த ஜனாதிபதி தேர்தல் ஈழத் தமிழர்களின் துக்க தினமாகும்.

தமிழீழத்தில் மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது மக்கள் இந்ந தேர்தல் நாளை இனப்படுகொலையின் துக்க தினமாக அனுஷ்டிக்கும்படி வேண்டுகிறோம்.

புலம் பெயர் நாடுகளில் வாழும் எமது மக்கள் சர்வதேச நாடுகளுக்கு எமது அவலம் தெரியும்படி கறுப்புக் கொடிகள் ஏற்றி துக்கத்தை வெளிப்படுத்துமாறு வேண்டப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

பொன்சேகாவுக்கு சந்திரிகா ஆதரவு...

இந்த நிலையில், சரத் பொன்சேகாவை, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா சந்தித்துப் பேசி ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஹொரகொல்லையில் உள்ள, முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கவின் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் இந்த சந்திப்பு இடம் பெற்றது.

யாருக்கு தனது ஆதரவு என்பதை இதுவரை சந்திரிகா தெரிவிக்கவில்லை. அதேசமயம் ராஜபக்சேவை அவர் தொடர்ந்து விமர்சித்து வந்தார். தன்னை சந்தித்துப் பேசி ஆதரவு கேட்க முயன்ற ராஜபக்சேவை நிராகரித்தார். இந்த நிலையில் பொன்சேகாவை அவர் சந்தித்துள்ளது, அவருக்கான தனது ஆதரவை மறைமுகமாக உணர்த்துவது போல உள்ளது இலங்கை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெளத்த ஆலயம் அடித்து நொறுக்கப்பட்டது

பொன்சேகாவுக்கு ஆசி வழங்கியதால் பெளத்த ஆலயம் அடித்து நொறுக்கப்பட்டது

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆசிகளை வழங்கிய பெளத்த ஆலயம் நேற்று அதிகாலை அரச ஆதரவாளர்களால் தாக்கி சேதமாக்கப்பட்டதாக ஆலையத்தின் பிரதம பெளத்த துறவி வண அம்பலாங்கொட சிறி தம்ம தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

அம்பலாங்கொட பகுதிக்கு ஜெனரல் பொன்சேகா விஜயம் மேற்கொண்டபோது எமது ஆலயத்திற்கு வந்து என்னிடம் ஆசிபெற்று சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து ஆயலத்திற்குள் புகுந்த இனந்தெரியாத ஆயுதம் தாங்கிய குழுவினர் என்னை வெளியில் வரும்படி அழைத்தனர். நான் வெளியே செல்ல மறுத்ததால் ஆலயத்தைத் தாக்கி சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். அவர்கள் செல்லும் போது எனக்கு எச்சரிக்கைகளையும் விடுத்து சென்றுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்று அதிகாலை ஒரு மணியளவில் அம்பலாங்கொடப் பகுதியின் போரம்ப பிரதேசத்திலுள்ள சுகத பின்ப ரமய பெளத்த ஆலயமே தாக்கிச் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

அவதார புருஷனாக இருக்கும் பிரபாகரன்


விடுதலைப்புலிகள் வலுவாக இருந்தவரை தெற்கில் இருந்து சிங்களர்கள் யாரும் தமிழர் நிலப்பகுதிக்குள் காலடி எடுத்து வைக்க முடியாத நிலை இருந்தது. தற்போது அது தலைகீழாக மாறிவிட்டது. சிங்களர்கள் பயமின்றி ஈழத்துக்குள் வரத்தொடங்கி உள்ளனர்.
அதற்கு வசதியாக வடக்கு தமிழர் பகுதிகளையும் தெற்கில் உள்ள சிங்களர்கள் பகுதியையும் இணைக்கும் ஏ-9 தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான சிங்களர்கள் வியாபாரிகளாகவும், சுற்றுலா பயணிகளாகவும் யாழ்ப்பாணம் வருகிறார்கள்.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் சென்று சிங்களர்கள் சுற்றிப் பார்க்கிறார்கள். தமிழர்களின் கோவில்களுக்கு செல்கிறார்கள். அதோடு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்கும் செல்கிறார்கள்.

வல்வெட்டித்துறையில் பிரபாகரன் பிறந்து, வளர்ந்த வீடு தற்போது சிதிலமடைந்து கிடக்கிறது. சிங்கள ராணுவம் சரமாரியாக குண்டுகளை வீசியதால் அந்த வீட்டின் பெரும் பகுதி சேதமாகிவிட்டது.

பிரபாகரன் வீட்டை சிங்களர்கள் ஆர்வமுடன் சுற்றிப்பார்க்கிறார்கள். அந்த வீடு முன்பு நின்று போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள். அதோடு பிரபாகரன் வீட்டுக்குள் இருந்த சிறிதளவு மண் எடுத்துச் செல்கிறார்கள்.

அந்த மண்ணில் பிறந்ததால் பிரபாகரன் வீரமும், தீரமும் கொண்டிருந்ததாக கருதுகிறார்கள். இதன் மூலம் சிங்களர்கள் மனதிலும் பிரபாகரன் தன்னிகரற்ற அவதார புருஷனாக வாழ்வது தெரிய வந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் : வாக்களிப்பு நிலவரங்கள்


நாட்டில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சில மாவட்டங்களின் தற்போதைய நிலைமை

"மன்னார் மாவட்டத்தில் மக்கள் உற்சாகமாக வாக்களிக்கின்றனர். மன்னார் மாவட்டத்தில் 85,122 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மன்னாரில் 28 வாக்களிப்பு நிலையங்களும், மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் 42 வாக்களிப்பு நிலையங்களும் மொத்தமாக 70 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 103 வாக்களிப்பு பெட்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, தூர இடங்களில் வாக்களிப்பவர்களுக்கான போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. வன்முறைகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை. எனினும் வாக்களிப்பு நிலையங்களுக்கு இடைநடுவே சில குழுக்கள் வாக்களிக்கச் செல்லும் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றனர்."

யாழ்ப்பாணம் "காலையில் சற்று மந்தமாக காணப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் தற்போது சுறுசுறுப்பு காணப்படுகின்றது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் வாக்களிக்க வருகை தந்து கொண்டிருக்கின்றனர். காலையில் சற்று பதட்டமான நிலை காணப்பட்ட போதிலும், தற்போது மக்கள் கூட்டம் கூட்டமாக வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்து வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர்."

"மலையக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுகின்றனர். இன்று பெரும்பாலான தோட்டங்களில் காலையில் வேலைக்குச் சென்று 11.00 மணியளவில் திரும்பி வந்து வாக்களிக்க ஆரம்பித்துள்ளனர்.

பொகவந்தலாவை, ஹட்டன், மஸ்கெலியா போன்ற நகரங்களில் வர்த்தக நடவடிக்கைகள் மந்தகதியிலேயே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. வாக்களிப்பு நிலையங்களுக்கருகில் பொலிஸ், இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வாக்களிப்பு வீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது."

கொழும்பு மற்றும் கொழும்பு வடக்குப் பகுதியில் இதுவரையில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என தேர்தலை கண்காணிப்பதற்கான பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. மக்களும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர். வழமையைவிட மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.





Monday, January 25, 2010

பொலிஸ் இடமாற்றம் அரசியல்வாதிகள் பரபரப்பு


வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமால் லிவ்ஹே, யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மார்க் உட்பட்ட உயர் அதிகாரிகள் திடீரென இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ் இடமாற்றம் அரசியல்வாதிகள் மத்தியில் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வடக்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லிவ்ஹே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பான பொலிஸ் மா அதிபரின் கடிதம் நேற்று மாலை தமக்கு கிடைத்ததாக நிமால் லிவ்ஹே குறிப்பிட்டுள்ளார்.

அவர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி யாக செயற்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவர் இன்று காலை முதல் பொலிஸ் தலைமையகத்தின் கடமைகளை பொறுப்பேற்குமாறு பொலிஸ் மா அதிபரால் பணிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அதற்கான காரணங்கள் எவையும் தெரிவிக்கப்படவில்லை. இதேவேளை ஏற்கனவே யாழ்ப்பாண கட்டளை தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மார்க் பங்களாதேஷிக்கு அனுப்பப்பட்டு அதற்கு பதிலாக மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்க யாழ். மாவட்ட கட்டளைத்தளத்பதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் வடமராட்சியில் இருந்த இராணுவ உயர் அதிகாரி ஒருவரும் கொழும் புக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் இடம்பெறும் இவ் இட மாற்றங்கள் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப் பாகப் பேசப்பட்டது.